Monday, June 18, 2007

செம்மண் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் : செம்படுகை நன்னீரகம்














புதுவை செம்படுகை நன்னீரகம் தலைவர் கு. இராம்மூர்த்தி வெளியிட்ட அறிக்கை :

புதுவையின் வடக்கு பகுதி எல்லைகளாக உள்ள முத்தரையர்பாளையம், தர்மாபுரி, அய்யங்குட்டிபாளையம், குருமாம்பேட், மேட்டுப்பாளையம் ஆகிய ஊர் களின் செம்மண் நிலப்பகுதியை அடுத்து உள்ள தமிழகத்தின் பூத்துரை, மணவெளி ஆகிய ஊர்களின் மானாவாரி செம்மண் நிலப்பகுதி உள்ளது. அங்கு அடர் ந்த முந்திரி, மா உள்பட ஏராளமான காட்டு மரங்களும், வேளாண் நிலப்பகுதியும் அமைந்துள்ளது. இது புதுவைக்கு பயன்தக்க வகையில் சிறந்த நீர்பிடிப்பு பகுதியாகவும், தூய நன்னீர் நிலத்தடியில் கிடைக்க வாய்ப்பாகவும் உள்ளது.

இச்சூழலில் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் செம்மண் அள்ளப்பட்டு பாழாக்கப்பட்ட பின் மக்களின் போராட்டங்களுக்கு பிறகு புதுவை பகுதியில் மண் எடுப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் கடந்த 2 மாதங்களாக புதுவை எல்லைப் பகுதியில் மீண்டும் ஆயிரக்கணக்கான லாரி செம்மண் எடுக்கப்படுகிறது.

இப்படி புதுவை எல்லைப் பகுதியில் பல திறந்த வெளி செம்மண் சுரங்கம் உருவாக்கப்படுவதால் புதுவையில் நிலத்தடி நீர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை ரசாயன ஆலைகளின் தவ றான நடவடிக்கையால் பெருமளவு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட சூழலில் மேற்கண்ட செம்மண் சுரங்கங்கள் உருவாவதால் நிலத் தடி நீர் பெருமளவில் அற்றுப்போக வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக புதுவைக்கு குடிநீர் வழங்கும் முத்திரையர்பாளையம் நீராதார பகுதி பெரிய அளவில் பாதிக்கப்படும். செம்மண் எடுக்க அரசு அனுமதி கொடுத்த இடத்தில் தான் மண் அள்ளப்படுகிறதா? அரசு அனுமதியில் இது நடக்கிறதா? 75 அடி ஆழம் அளவுக்கு செம் மண் எடுக்க அனுமதி உள் ளதா?

எனவே, புதுவையின் சுற்றுப்புறசூழல் துறை, பொதுப்பணித்துறை, குடிநீர் பிரிவு, நிலத்தடி நீர் ஆணை யம் ஆகியவை ஒருங்கிணைந்து இந்த செம்மண் சுரங்கத்தை பார்வையிட்டு சுற்றுச்சூழல் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான சட்ட நடவடிக்கை எடுத்து புதுவையின் மண் வளத்தை, நீர் ஆதா ரத்தை காத்திட புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.